கால்நடை சுகாதார முகாம்


கால்நடை சுகாதார முகாம்
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 12 Dec 2022 10:59 PM IST)
t-max-icont-min-icon

எரவாஞ்சேரி ஊராட்சியில் கால்நடை சுகாதார முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலதண்டாயுதம் தலைமை தாங்கினார்.கால்நடை உதவி டாக்டர் முத்துகுமரன் முன்னிலை வகித்தார்.முகாமில் கால்நடை நோய்களுக்கு தடுப்பூசி, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.இந்த முகாமில் 450-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன் பெற்றன. இதில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மேலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முகாமில் கால்நடை ஆய்வாளர்கள் தனசேகரன், பாபுஜி, பராமரிப்பு உதவியாளர் கிருஷ்ணகுமார், ஊராட்சி செயலர் மகேந்திரன் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story