கால்நடை சுகாதார முகாம்


கால்நடை சுகாதார முகாம்
x

நெய்விளக்கு ஊராட்சியில் கால்நடை சுகாதார முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா நெய்விளக்கு ஊராட்சியில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கவிதா தர்மராஜன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். முகாமில் 133 கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, தடுப்பூசி, மலடு நீக்கம், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் உள்ளிட்டவை செய்யப்பட்டது. இதில் சிறப்பாக மாடுகளை வளர்த்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முகாமில் கால்நடை உதவி டாக்டர் கலைச்செல்வி, சிவசூரியன் உள்பட கால்நடை துறையினர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story