தர்மபுரியில் தர்மபுரியில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்-பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
தர்மபுரி:
தர்மபுரியில் அண்ணா 114-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது உருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அண்ணா பிறந்தநாள்
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா நேற்று தர்மபுரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி 4 ரோட்டில் உள்ள அவரது உருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தர்மபுரி நகர மற்றும் மாவட்ட தி.மு.க. சார்பில் ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகில் இருந்து மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. எம்.ஜி. சேகர், நகர செயலாளர் நாட்டான் மாது, நகராட்சி தலைவர் லட்சுமி, முன்னாள் நகர செயலாளர் அன்பழகன், மாவட்ட பொறுப்புக்குமு உறுப்பினர்கள் தங்கமணி, சந்திரமோகன், நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் பெரியண்ணன், சார்பு அமைப்பு மாவட்ட அமைப்பாளர்கள் கவுதமன், காசிநாதன், ராஜா, ஒன்றிய செயலாளர்கள் வைகுந்தன், சக்திவேல், நகராட்சி கவுன்சிலர்கள் முல்லைவேந்தன், முருகவேல், பாண்டியன், சம்பந்தம், புவனேஸ்வரன், ராஜா, சுருளிராஜன், மாதேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.
தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பெரியார் சிலை அருகில் இருந்து மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், நகர செயலாளர் பூக்கடை ரவி ஆகியோர் முன்னிலையில் ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் தகடூர் விஜயன், பழனிசாமி, கோவிந்தசாமி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், நகர அவைத் தலைவர் வடிவேல், ஒன்றிய செயலாளர்கள் நீலாபுரம் செல்வம், சிவப்பிரகாசம், பழனி, செந்தில்குமார், செல்வராஜ், சேகர், முருகன், கூட்டுறவு சங்க தலைவர் அங்குராஜ், நகராட்சி கவுன்சிலர்கள் தண்டபாணி, நாகராஜன், மாதேஷ், சுரேஷ், மாதையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அ.ம.மு.க.-ம.தி.மு.க.
தர்மபுரி மாவட்ட அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆவின் அலுவலகம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட அவைத் தலைவர் முத்துசாமி, பொருளாளர் மணிமேகலன், துணைச் செயலாளர் ஏகநாதன், நகர செயலாளர் பார்த்திபன், ஒன்றிய செயலாளர்கள் கணேசன், சாம்ராஜ், கருணாகரன், தங்கமணி, பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தங்கராஜ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் டாக்டர் ஆசை பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர் வஜ்ரவேல், நகர செயலாளர் முத்தியாலு, ஒன்றிய செயலாளர் பிரகாசம், நிர்வாகி சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திராவிடர் கழகம்
இதேபோன்று தர்மபுரி நகர திராவிடர் கழகம் சார்பில் நகர தலைவர் நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ் செல்வி, மாவட்ட தலைவர் சிவாஜி, மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன், மாவட்ட அமைப்பாளர் காமராஜ், நகர அமைப்பாளர் ராமச்சந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் பரமசிவன், சிவபாதம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் இண்டூரில் அண்ணா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஒன்றிய செயலாளர் சோளப்பாடி பழனி தலைமை தாங்கி அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் வேடி, பொருளாளர் ரங்கன், துணைச் செயலாளர் சக்தி, மாவட்ட பிரதிநிதிகள் கணேசன், தனபால், லட்சுமி ஜெமினி, ஒன்றிய இணைச்செயலாளர் குமார், அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் முனிராஜ், ஊராட்சி மன்ற தலைவர் கன்னியப்பன், நிர்வாகிகள் முனியப்பன், நாகராஜ், விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நல்லம்பள்ளி
இதேபோன்று கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நல்லம்பள்ளியில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஒன்றிய செயலாளர் என்.ஜி.எஸ். சிவப்பிரகாசம் தலைமை தாங்கி அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் கொழந்தைசாமி, மாவட்ட பிரதிநிதி பழனி, எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் மணி, இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் திருமால் வர்மா, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் தங்கபாலு, தலைவர் மூர்த்தி, நிர்வாகிகள் விஸ்வநாதன், குமரவேல், ரஞ்சித், குமார் மனோகரன், நாகேஷ் சர்மா, வேடியப்பன், மாதவி ஆகியோர் கலந்து கொண்டனர்.