அண்ணா நினைவு நாள்:திருச்செந்தூர் கோவிலில் பொதுவிருந்து
அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் பொதுவிருந்து நடந்தது.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடந்தது. நிகழ்ச்சிக்கு கோவில் இணை ஆணையர் கார்த்திக் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட மண்டல இணை ஆணையர் அன்புமணி, திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் நகராட்சி துணை தலைவர் செங்குழி ரமேஷ் கலந்து கொண்டு பக்தர்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கி, பொது விருந்தினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அறநிலையத்துறை நெல்லை மாவட்ட உதவி ஆணையர் சங்கர், தூத்துக்குடி மாவட்ட துணை ஆணையர் வெங்கடேஷ், கோவில் அலுவலக கண்காணிப்பாளர் ரவீந்திரன்உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story