5,500 கிலோ அரிசியில் அன்ன பூஜை
கோவில்பட்டியில் 5,500 கிலோ அரிசியில் அன்ன பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி விவேகானந்தா கேந்திரம் சார்பில் கிராம முன்னேற்ற திட்டத்தில் 16 காப்பகங்களுக்கு ஆண்டு முழுவதும் அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் அன்னபூஜை மற்றும் கீதை ஜெயந்தி விழா நேற்று கோவில்பட்டியில் நடந்தது.
பிராமணாள் மகாசபை செயலாளர் ராமசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கேந்திர மாவட்ட பொறுப்பாளர் பரமகுரு வரவேற்று பேசினார். நிகழ்ச்சியையொட்டி மேடையில் 5,500 கிலோ அரிசி குவியலில், அன்னபூரணி சிலையை வைத்து, பெண்கள் சிறப்பு பூஜை வைத்து வழிபாடு நடத்தினார்கள்.
இதில் கிராமிய முன்னேற்ற செயலாளர் அய்யப்பன், கிருஷ்ணமூர்த்தி, தொழிலதிபர் நெல்லையப்பன், சாரதா சன்மார்க்க சங்கம் நிரஞ்சனா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். இந்த பூைஜயில் வைக்கப்பட்ட 5,500 கிலோ அரிசி 16 காப்பகங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story