அண்ணா மறுமலர்ச்சி திட்ட விழிப்புணர்வு முகாம்
அண்ணா மறுமலர்ச்சி திட்ட விழிப்புணர்வு முகாம்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அண்ணா மறுமலர்ச்சி திட்ட விழிப்புணர்வு முகாம் சோழவித்யாபுரத்தில் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். நாகை மாலி எம்.எல்.ஏ., தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வேளாண்மைத்துறையின் மூலம் 300 பயனாளிகளுக்கு தென்னை மரக்கன்றுகள் மற்றும் மானிய விலையில் கடப்பாரை, மண்வெட்டி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் வேளாண்மை இணை இயக்குனர் ஜாக்குல்லாஅகண்டராவ், ஆத்மா குழு தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், கூடுதல் கலெக்டர் பிரித்திவிராஜ், கீழையூர் ஒன்றியக்குழு தலைவர் செல்வராணி ஞானசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் கோமதிதமிழ்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ரூ. 12லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை கலெக்டர், எம்.எல்.ஏ ஆகியோர் திறந்து வைத்தனர்.