அண்ணா மறுமலர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் சார்பில் ஒருங்கிணைப்பு குழு சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள இ.எல். ரெட்டியாபட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் சார்பில் ஒருங்கிணைப்பு குழு சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வெம்பக்கோட்டை யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். சமூக நலத்திட்ட தனி தாசில்தார் ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் வி.டி. மகேந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மகளிர் திட்ட இயக்குனர் தேவேந்திரன் கலந்து கொண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார். இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யபாமா, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, சுகாதாரத்துறை, கால்நடை அலுவலர்கள், சமூக நல ஆர்வாளர்கள், தொண்டு நிறுவனத்தினர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கப்பட்டது. பின்னர் பயனாளிகளுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. முடிவில் ஊராட்சி செயலாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.