சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.1 கோடியில் அண்ணா ஆய்வு இருக்கை


சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில்  ரூ.1 கோடியில் அண்ணா ஆய்வு இருக்கை
x

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் அண்ணா ஆய்வு இருக்கை அமைக்கப்பட்டுள்ளதாக துணை வேந்தர் ஜெகநாதன் கூறினார்.

சேலம்

கருப்பூர்

பிறந்த நாள் விழா

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அண்ணா இருக்கை சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது, இதில் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் தலைமை தாங்கி அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசும் போது கூறியதாவது:-

அண்ணாவின் பேச்சாற்றல், எழுத்தாற்றல், சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் ஆய்வு மேற்கொள்ள ரூ.1 கோடி மதிப்பில் ஆய்வு இருக்கை உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் வகையில்அண்ணா இருக்கை செயல்பாடுகள் அமையும். அண்ணாவின் சிந்தனைகளை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் மாணவர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

ஆய்வரங்குகள்

அண்ணா நடத்திய 2-ம் உலக தமிழ் மாநாட்டின் காரணமாக தமிழ்நாட்டில் தமிழ் கோலோச்ச தொடங்கியுள்ளது. பிற மொழி கலப்பின்றி புதிய தமிழ் சொற்களை அண்ணா உருவாக்கினார். இது வெறும் மொழியின் அடையாளமாக மட்டுமல்லாமல் பண்பாட்டின் அடையாளமாக உருவெடுத்துள்ளது. மாணவர்களுக்கு பயன்படுத்தும் வகையில் அண்ணா இருக்கை சார்பில் ஆய்வரங்குகள் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சபாபதி மோகன் கலந்துகொண்டு பேசினார்.

பரிசளிப்பு

பின்னர் அண்ணா பிறந்தநாளையொட்டி, சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை துணை வேந்தர் ஜெகநாதன், சிறப்பு விருந்தினர் சபாபதி மோகன் ஆகியோர் வழங்கினர். விழாவில் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கலைஞர் ஆய்வு மைய இயக்குனர் சுப்பிரமணி நன்றி கூறினார்.


Next Story