தூத்துக்குடியில் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தூத்துக்குடியில் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து தொழிலாளர்களிடம் விளக்கி கூறும் வகையில் வாயிற்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் முத்தம்மாள் காலனி போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று நடந்தது. கூட்டத்துக்கு போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் கல்விக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக். ராஜா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் அமைப்புசாரா ஓட்டுநரணி மாநில இணைச் செயலாளர் பெருமாள்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story