அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

வள்ளியூரில் அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்காததைக் கண்டித்தும், குறைந்த சம்பள உயர்வு வழங்கிய தி.மு.க. அரசைக் கண்டித்தும், போக்குவரத்து நிர்வாகத்தைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.தி.மு.க. சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும், தேர்தல் பிரிவு துணை செயலாளரும், ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இன்பதுரை தலைமை தாங்கி பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் அண்ணா தொழிற்சங்க மாநில போக்குவரத்து துணை செயலாளர் விரேசன், பொதுக்குழு உறுப்பினர் செழியன், தொழிற்சங்க வக்கீல் பிரிவு செயலாளர் கல்யாணகுமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்குமார், அண்ணா தொழிற்சங்க நெல்லை மண்டல நிர்வாகிகள், சேரன்மாதேவி, வள்ளியூர், திசையன்விளை கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story