அன்னாபிஷேக விழா
அன்னாபிஷேக விழா நடந்தது.
எஸ்.புதூர்,
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்து வருகிறது. இந்த ஐப்பசி மாதத்தில்தான் சந்திரன் தனது சாபம் முழுமையாக நீங்கி பதினாறு கலைகளுடன் பொலிவுடன் தோன்றுகிறான். ஒருவன் எத்தகைய உணவு உண்கிறானோ அதை பொறுத்தே அவனுடைய மனம் இருக்கும் என உபநிடதங்கள் சொல்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை கொஞ்சம்கூட வீணாக்கலாது என்பதை உணர்த்த அன்னாபிஷேகம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அன்னாபிஷேக விழாவையொட்டி உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாத சாமி மற்றும் கரிசல்பட்டி கைலாசநாதர் சாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சாமிக்கு அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும், காய்கள், கனி வகைகளையும் கொண்டும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்ன பிரதாசம் வழங்கப்பட்டது.