ராமலிங்க சுவாமி கோவிலில் அன்னாபிஷேகம்
மகாதேவ அஷ்டமியையொட்டி நெல்லை அருகன்குளம் ராமலிங்க சுவாமி கோவிலில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மகாதேவ அஷ்டமியையொட்டி நெல்லை அருகன்குளம் ராமலிங்க சுவாமி கோவிலில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மகாதேவ அஷ்டமி
நெல்லை அருகே உள்ள அருகன்குளம் பழைய கிராமத்தில் உள்ள ராமலிங்க சுவாமி சமேத பர்வதவர்தினி அம்மன் கோவிலில் மகாதேவ அஷ்டமியையொட்டி நேற்று காலை 10 மணிக்கு ராமலிங்க சுவாமிக்கு சிறப்பு கும்ப பூஜையும், மதியம் 12 மணிக்கு அன்னாபிஷேகமும், 108 சங்காபிஷேகம், சொர்ணாபிஷேகமும் நடந்தது.
இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பிண்டம் போட்ட ராமருக்கும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 2 மணிக்கு அன்னதானம் நடந்தது.
கால பைரவர்
இதேபோல் நெல்லையப்பர் கோவிலில் மகாதேவ அஷ்டமியையொட்டி சுவாமிக்கும், அம்பாளுக்கும், காலபைரவருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதையொட்டி காலபைரவருக்கு பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர் கோவிலில் மகாதேவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், சிறப்பு பூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் நெல்லை மாநகரத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் உள்ள காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனையும், சிறப்பு பூஜைகளும் நடந்தது.