ரூ.42½ லட்சத்தில் அன்னதான கூடத்தை நந்தகுமார் எம்.எல்.ஏ.திறந்து வைத்தார்

ரூ.42½ லட்சத்தில் அன்னதான கூடத்தை நந்தகுமார் எம்.எல்.ஏ.திறந்து வைத்தார்
x

ரூ.42½ லட்சத்தில் அன்னதான கூடத்தை நந்தகுமார் எம்.எல்.ஏ.திறந்து வைத்தார்

வேலூர்

அணைக்கட்டு

ரூ.42½ லட்சத்தில் அன்னதான கூடத்தை நந்தகுமார் எம்.எல்.ஏ.திறந்து வைத்தார்

அணைக்கட்டு தொகுதியில் பல்வேறு இடங்களில் பயணிகள் நிழற்கூடம் மேல் நீர்த்த தேக்க தொட்டிகள், மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகள், புதிய கட்டிடப் பணிக்கான பூமி பூஜைகள் உள்ளிட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ.தலைமை தாங்கி பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார். செதுவாலை ஊராட்சியில் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட மேல் நீர் தேக்கத்தொட்டியினை திறந்து வைத்தார். வெட்டுவானம் எல்லையம்மன் கோவிலில் ரூ.89 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக முடி காணிக்கை செலுத்தும் மண்டபம் கட்டப்பட உள்ளது இதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு மண்டபம் கட்டும் பணியை தொடங்கி வைத்த அவர் ரூ.42.5 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அன்னதானக் கூட்டத்தையும் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, அணைக்கட்டு ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன், பள்ளிகொண்டா பேரூராட்சி தலைவர் சுபப்பிரியா குமரன், துணை தலைவர் வசிம் அக்ரம், கோவில் செயல்அலுவலர் நரசிம்மமூர்த்தி, மேலாளர் சரவண பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து ஒதியத்தூர் ஊராட்சி மற்றும் ஊனை பள்ளத்தூரில் பகுதி நேர ரேஷன் கடைகளை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.

Next Story