அண்ணாமலை 28-ந்தேதி ராமநாதபுரத்தில் பாதயாத்திரையை தொடங்குகிறார்: சென்னையில் 4 நாட்கள் பயணம்


அண்ணாமலை 28-ந்தேதி ராமநாதபுரத்தில் பாதயாத்திரையை தொடங்குகிறார்: சென்னையில் 4 நாட்கள் பயணம்
x

ஊழலுக்கு எதிராக ‘என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் அண்ணாமலை 28-ந்தேதி ராமநாதபுரத்தில் பாதயாத்திரையை தொடங்கி தமிழகம் முழுவதும் செல்கிறார். சென்னையில் 4 நாட்கள் பயணம் செய்கிறார்.

சென்னை,

ஊழலுக்கு எதிராக 'என் மண், என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மாநிலம் முழுவதும் பாதயாத்திரை செல்ல இருக்கிறார். ஆன்மிக பூமியான ராமநாதபுரத்தில் வருகிற 28-ந்தேதியன்று அவர் தனது பயணத்தை தொடங்குகிறார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அண்ணாமலையின் பாதயாத்திரையை தொடங்கி வைக்க உள்ளார். 29-ந்தேதி ராமேசுவரம், 30-ந்தேதியன்று முதுகுளத்தூர், பரமக்குடி, 31-ந்தேதியன்று திருவாடானை, சிவகங்கையில் நடைபயணம் செல்கிறார்.

மதுரை-தூத்துக்குடி- திருநெல்வேலி

ஆகஸ்டு 1-ந்தேதி மானாமதுரை, திருப்பத்தூர், 2-ந்தேதி ஆலங்குடி, அறந்தாங்கி, 3-ந்தேதி திருமயம், காரைக்குடி, 4-ந்தேதி மேலூர், சோழவந்தான், 5-ந்தேதி மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை மத்தியம் மற்றும் மதுரை தெற்கு, 7-ந்தேதி மதுரை மேற்கு பயணம் மேற்கொள்கிறார். அப்போது மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

8-ந்தேதி திருப்பரங்குன்றம், திருமங்கலம், 9-ந்தேதி திருச்சுழி, அருப்புக்கோட்டை, 10-ந் தேதி விருதுநகர், சிவகாசி, 11-ந்தேதி சாத்தூர், கோவில்பட்டி, 12-ந்தேதி விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், 13-ந்தேதி ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, 14-ந்தேதி திருச்செந்தூர், 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை கன்னியாகுமரி, 18-ந்தேதி ராதாபுரம், நாங்குநேரி, 19-ந்தேதி அம்பாசமுத்திரம், ஆலங்குளம், 20-ந்தேதி பாளையங்கோட்டை, திருநெல்வேலி, 31-ந்தேதி தென்காசி மாவட்டத்தில் அண்ணாமலை பாதயாத்திரை செல்கிறார்.

சென்னையில் 4 நாட்கள்...

இதேபோல செப்டம்பர் 1-ந்தேதி கடையநல்லூர், 6-ந்தேதி திண்டுக்கல், 12, 13-ந்தேதிகளில் கோவை, 16-ந்தேதி நீலகிரி, 21-ந்தேதி ஈரோடு, 22-ந்தேதி திருப்பூர், 27-ந்தேதி நாமக்கல், அக்டோபர் 9-ந்தேதி கரூர், 11-ந்தேதி திருச்சி, 18-ந்தேதி அரியலூர், 19-ந்தேதி புதுக்கோட்டை, 25-ந்தேதி நாகை, 31-ந்தேதி சிதம்பரம், நவம்பர் 1-ந்தேதி மயிலாடுதுறை, 4-ந்தேதி கள்ளக்குறிச்சி, 5-ந்தேதி கடலூர், 7-ந்தேதி விழுப்புரம், 20-ந்தேதி திருவண்ணாமலை, 27-ந்தேதி சேலம் நடைபயணம் செல்ல இருக்கிறார்.

டிசம்பர் 8-ந்தேதி தர்மபுரி, 11-ந்தேதி கிருஷ்ணகிரி, 13-ந்தேதி திருப்பத்தூர், 17-ந்தேதி ராணிப்பேட்டை, 18-ந்தேதி வேலூர், ஜனவரி 2-ந்தேதி அரக்கோணம், திருவள்ளூர், 3-ந்தேதி செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், 4-ந்தேதி மதுரவாயல், அம்பத்தூர், 5-ந்தேதி ஆவடி, மாதவரம், 6-ந்தேதி பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, 7-ந்தேதி சென்னை வடக்கு, 8-ந்தேதி சென்னை மத்தியம், 9-ந்தேதி சென்னை தெற்கு, 10-ந்தேதி சோழிங்கநல்லூர், திருப்போரூர், 11-ந்தேதி சென்னையில் தனது பாதயாத்திரையை அண்ணாமலை நிறைவு செய்கிறார். சென்னையில் மட்டும் 4 நாட்கள் பயணம் செல்கிறார்.

பயண திட்டம்

ஜூலை (இந்த மாதம்) முதல் ஜனவரி மாதம் வரையிலான 7 மாதங்களில் ஒரு சில நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் அண்ணாமலை பாதயாத்திரை செல்ல இருக்கிறார். தமிழகத்தின் அனைத்து ஊர்களுக்கும் செல்கிறார். இதற்கான பயண திட்டங்களை பா.ஜ.க.வினர் வகுத்து வருகின்றனர்.

இதற்கிடையே அண்ணாமலையின் பாதயாத்திரையையொட்டி முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரக்கோரி பா.ஜ.க. சார்பில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story