கடலூர், சிதம்பரத்தில் அண்ணாமலை உருவ பொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம்


கடலூர், சிதம்பரத்தில்  அண்ணாமலை உருவ பொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம்
x

கடலூர், சிதம்பரத்தில் அண்ணாமலை உருவ பொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்


கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ஜ.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து நேற்று முன்தினம் கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றியும், கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழக வேளாண்மை துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பற்றியும் அவதூறாகவும், ஒருமையிலும் பேசியதாக தெரிகிறது.

இதை கண்டிக்கும் வகையில் நேற்று கடலூர் தி.மு.க. அலுவலகத்தில் மாநகர செயலாளர் ராஜா தலைமையில் தி.மு.க.வினர் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக கடலூர் சில்வர் பீச் ரோடு- பாரதி சாலை சிக்னல் முன்பு குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உருவ பொம்மையை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டன கோஷம்

மேலும் அண்ணாமலைக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர். போராட்டத்தில் மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, மாநகர துணை செயலாளர்கள் அகஸ்டின்பிரபாகரன், சுந்தரமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் விக்ரமன், பகுதி செயலாளர்கள் சலீம், இளையராஜா, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப பிரிவு கார்த்திக், மண்டல தலைவர் பிரசன்னா, பகுதி துணை செயலாளர்கள் லெனின், ஜெயசீலன் மற்றும் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது பற்றி அறிந்ததும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, எரிந்து கொண்டிருந்த உருவ பொம்மையில் தண்ணீர் ஊற்றி அணைத்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் கடலூரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புகாக குவிக்கப்பட்டனர்.

சிதம்பரம்

இதேபோல் சிதம்பரத்தில் சீர்காழி செல்லும் புறவழிச்சாலையில் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெராம்பட்டு சங்கர் தலைமையில் தி.மு.க.வினர், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அண்ணாமலைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திர குமார், நடராஜன், ஒன்றிய துணை செயலாளர் பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் மஞ்சு, மாவட்ட பிரதிநிதிகள் சேரமான், பாலசுப்பிரமணியன், அவை தலைவர் கிருஷ்ணசாமி, நான் முனிசிபல் கவுன்சிலர் எம்.கே பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உசூப்பூர்

சிதம்பரம் அருகே கடவாச்சேரி ஊராட்சி உசுப்பூர் பாலம் அருகே குமராட்சி மத்திய ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் வாசு என்கிற விஸ்வராஜ் தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து கண்டன கோஷம் எழுப்பினர். இதில் தி.மு.க. வல்லம்படுகை கிளை செயலாளர் ராஜலிங்கம், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அருள்வேலன், சந்தானகுமார், தி.மு.க. இளைஞரணி ரகுராமன், அவைத்தலைவர் வீரபாண்டியன், நிர்வாகிகள் சக்திவேல், சரண்யா, ராஜேஷ், செந்தில், அருண், தில்லை விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குமராட்சி

குமராட்சி கடைவீதியில் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய தி.மு.க. சாா்பில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சோழன், மாவட்ட பிரதிநிதி க.கோபாலகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர்கள் அப்பு சத்யநாராயணன், சகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் நிர்வாகிகள் திருமால்வளவன், பாலு, அன்சாரி, சக்திவேல், ஒன்றிய கவுன்சிலர்கள், ரஜினி, சிவலோகநாதன் மற்றும் தி.மு.க.வினர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.


Next Story