அண்ணாமலை நடைபயணத்தால் எந்த எழுச்சியும் ஏற்படாது


அண்ணாமலை நடைபயணத்தால் எந்த எழுச்சியும் ஏற்படாது
x
தினத்தந்தி 28 Aug 2023 1:15 AM IST (Updated: 28 Aug 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

அண்ணாமலை நடைபயணத்தால் எந்த எழுச்சியும் ஏற்படாது என்று தமிழ்ப்புலிகள் கட்சி மாநில தலைவர் பேட்டி அளித்தார்.

திண்டுக்கல்

தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாநில தலைவர் நாகை.திருவள்ளுவன் தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த தி.மு.க.வுடன் தமிழ்ப்புலிகள் கட்சி கூட்டணி அமைத்து தேர்தல் பணியாற்றும். தேர்தலில் போட்டியிட தமிழ்ப்புலிகள் கட்சிக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கப்படும். பள்ளிகளின் சாதி வெறி தாக்குதல் சம்பவங்கள் தற்போது அரங்கேறுகின்றன. இதனை ஒழிக்க வேண்டும் என்றால், சாதி ஒழிப்பு பாடத்திட்டத்தை கொண்டு வரவேண்டும்.

மணிப்பூர் விவகாரத்தில் அம்மாநில அரசு பதவி விலக வேண்டும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தால் தமிழகத்தில் எந்த எழுச்சியும் ஏற்பட போவதில்லை. 'நீட்' தேர்வு விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது போல் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது எங்களது லட்சியம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story