அண்ணாமலை பாதயாத்திரை ஏற்பாடுகள்-பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை


அண்ணாமலை பாதயாத்திரை ஏற்பாடுகள்-பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை
x

அண்ணாமலை பாதயாத்திரை ஏற்பாடுகள் குறித்து மதுரையில் பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

மதுரை


அண்ணாமலை பாதயாத்திரை ஏற்பாடுகள் குறித்து மதுரையில் பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.

மதுரைக்கு...

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண்' 'என் மக்கள்' என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். மதுரை மாநகர், கிழக்கு புறநகர் பகுதிகளுக்கு ஏற்கனவே அறிவித்தபடி நாளை மறுநாள்( 5-ந் தேதி) அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.

இது தொடர்பாக மதுரை கிழக்கு புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று ஒத்தக்கடையில் நடந்தது. கூட்டத்திற்கு மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராஜசிம்மன் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கிழக்கு தொகுதி பொறுப்பாளர், மாவட்ட பொதுச் செயலாளர் வக்கீல் மாதவ கண்ணன், நிகழ்ச்சி பொறுப்பாளர் வக்கீல் மூவேந்திரன் மற்றும் மாநில, மாவட்ட மற்றும் மண்டல் நிர்வாகிகள் தாங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகள் பற்றி கலந்துரையாடினார்கள்.

மேலும் ஓ.பி.சி. அணி நரசிங்கம் பாஸ்கரன், வர்த்தக பிரிவு வெள்ளைச்சாமி, சிறுபான்மை அணி மாநில செயலாளர் கல்வாரி தியாகராசன், ஊடக பிரிவு செல்வ மாணிக்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

மதுரை கிழக்கு தொகுதியில் 6-ந்தேதி நடைபெற இருந்தது மீண்டும் 5-ந் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது, எனவே நிர்வாகிகள் அனைவரும் குடும்பத்துடன் 5-ந்தேதி வரும் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்கூட்டம்

இது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நடைபயண நிகழ்ச்சி 5-ந் தேதி காலை 9 மணி வடக்கு தொகுதி ஆத்திகுளம் ராமகிருஷ்ணா மடம் முன்பு தொடங்கி உழவர் சந்தை, பிபி குளம், செல்லூர் 50 அடி ரோட்டில் நிறைவடைகிறது. அங்கு பொதுக்கூட்டம் நடக்கிறது.

பின்னர் மாலை 4.30 மணி மத்திய தொகுதி பெரியார் பஸ் நிலையம் கட்டபொம்மன் சிலை அருகில் தொடங்கி நேதாஜி ரோடு, தெற்கு ஆவணி மூலவீதி, கீழமாசி வீதி தேர் முட்டி அருகே முடிவடைந்து, அங்கு பொதுக்கூட்டம் நடக்கிறது. பின்னர் மாலை 6.30 மணிக்கு தெற்கு தொகுதி விளக்கு தூண், காமராஜர் சிலை அருகே தொடங்கி காமராஜர் சாலை, கீழவாசல், முனிச்சாலை, சந்தைபேட்டை, மாரியம்மன் தெப்பகுளம் முக்தீசுவரர் கோவில் முன்பு நிறைவடைந்து அங்கு பொது கூட்டம் நடக்கிறது. இதில் தொண்டர்கள், நிர்வாகிகள் குடும்பம் குடும்பமாக அனைவரும் பொதுமக்களுடன் பங்கேற்று பாதயாத்திரையை வெற்றி யாத்திரையாக்குவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Related Tags :
Next Story