அண்ணாமலையை கைது செய்ய வேண்டும்-விடுதலை சிறுத்தைகள் போலீஸ் நிலையத்தில் மனு
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர்.
அரியலூர்
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கோரி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட அமைப்பாளர் சிவகுமார் தலைமையில், மாநில துணை செயலாளர் கொளஞ்சி, சுந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்திடம் புகார் மனு அளித்தனர். அதில் டுவிட்டரில் பட்டியல் இன மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய அண்ணாமலை மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story