அண்ணாமலை நடைபயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது


அண்ணாமலை நடைபயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது
x

அண்ணாமலை நடைபயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

விருதுநகர்

ராஜபாளையம்,


அண்ணாமலை நடைபயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

மாநாடு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

1 கோடி தொழிலாளர்களுக்கு மேல் உள்ள விவசாய துறைக்கு தனி துறை உருவாக்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும். மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்ட வேலை நாட்களை 200 நாட்களாக அதிகப்படுத்தி, இத்திட்ட தொழிலாளர்களை விவசாய பணிகளிலும் ஈடுபடுத்த வேண்டும்.

நிலம் கையகப்படுத்துதல்

இலவச வீட்டு மனை பட்டாவுடன் அருகே பயிர் சாகுபடிக்கு தேவையான நிலத்தையும் வழங்க வேண்டும். தீண்டாமை நிகழ்வுகள் இன்னும் வேங்கை வயல் உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

தமிழகத்தில் ஆணவப்படுகொலையை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும். நெற்கதிர்களை அறுவடை செய்யும் நேரத்தில் மூர்க்கத்தனமான முறையில் என்.எல்.சி. நிலம் கையகப்படுத்துவது என்பது ஏற்கதக்கதல்ல. அறுவடை முடியும் வரை அதிகாரிகள் காத்திருக்க வேண்டும்.

அண்ணாமலை பாதயாத்திரை

அண்ணாமலை பாத யாத்திரையுடன் பா.ஜ.க. தமிழகத்தில் முடிவுக்கு வருகிறது. கமல்ஹாசன் மற்றும் ராகுல் காந்தி நடத்திய பாதயாத்திரைக்கும், அண்ணாமலை யாத்திரைக்கும் வித்தியாசம் உள்ளது.

அண்ணாமலை ஒரு விளம்பர பிரியர். விளம்பரத்திற்காக நடத்தும் யாத்திரை. இதனால் எந்த விளைவும் ஏற்பட போவதில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 3-வது அணி என்பது உருவாக வாய்ப்பு இல்லை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story