அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் புல முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் புல முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
அண்ணாமலைநகர்,
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புலத்தில் முதலாமாண்டு இளநிலை வேளாண்மை மற்றும் தோட்டக்கலை மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு வேளாண் புல முதல்வர் அங்கயற்கண்ணி தலைமை வகித்து பேசினார். அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, வேளாண் மற்றும் தோட்டக்கலை மாணவர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகள் உள்ளது. நமது நாட்டின் வளர்ச்சியில் வேளாண் துறையின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) சிங்காரவேல், மாணவர்கள் நேத்ரா தேவராஜ் மற்றும் கவி பாரதி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். விழாவில் சிண்டிகேட் உறுப்பினர் அரங்கபாரி, என்.சி.சி. அதிகாரி ராவ், கடல்சார் உயிரியல் துறை முதல்வர் அனந்தராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பேராசிரியர் முரளி கிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் முதலாமாண்டு மாணவர் ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நன்றி கூறினார்.