அப்துல்கலாம் வீட்டில் தேசிய கொடி ஏற்றிய அண்ணாமலை


அப்துல்கலாம் வீட்டில் தேசிய கொடி ஏற்றிய அண்ணாமலை
x

ராமேசுவரத்தில் மீனவர்களுடன் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சுதந்திர தினத்தை கொண்டாடினார்.

ராமேசுவரம்,

75-வது சுதந்திர தினத்தை மீனவர்களுடன் கொண்டாடுவதற்காக ராமேசுவரத்திற்கு பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வருகை தந்தார். நேற்று காலை 8 மணிக்கு கோவிலில் தரிசனம் செய்ய வருகை தந்தார். அவரை கோவிலின் பேஸ்கார் கமலநாதன் வரவேற்றார்.

அங்கு சாமி தரிசனம் செய்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வீட்டிற்கு சென்றார். அங்கு அப்துல்கலாம் மற்றும் அவரது மூத்த சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து வீட்டு வாசல் முன்பு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவருக்கு அப்துல்கலாமின் குடும்பத்தினர், சிறிய வடிவிலான அப்துல்கலாம் சிலை, அவர் பயன்படுத்திய பேனா, புத்தகங்கள் உள்ளிட்டவைகளை நினைவு பரிசுகளாக வழங்கினர். பின்னர் மீனவர்களுடன் விசைப்படகில் கடலுக்குள் சென்று சுதந்திர தினத்தை கொண்டாடினார்.

முன்னதாக அப்துல்கலாம் வீட்டில் அண்ணாமலைக்கு காலை உணவாக இட்லி, பூரி, பொங்கல், வடை வழங்கப்பட்டன. அதை அவர் விரும்பி சாப்பிட்டார்.


Next Story