வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரண பொருட்களை வழங்கிய அண்ணாமலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன.
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள்ளன. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ள நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில்,சென்னையில் வேளச்சேரி, சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிவாரணப் பொருட்களை அவர் வழங்கினார்.
Related Tags :
Next Story