அண்ணாமலையார் கோயில் என்பது தமிழ்நாட்டின் சொத்து, அதனை கட்டிக்காத்தது தி.மு.க. அரசு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்


அண்ணாமலையார் கோயில் என்பது தமிழ்நாட்டின் சொத்து, அதனை கட்டிக்காத்தது தி.மு.க. அரசு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

அண்ணாமலையார் கோயில் என்பது தமிழ்நாட்டின் சொத்து, அதனை கட்டிக்காத்தது தி.மு.க. அரசு என அரசு நிகழ்ச்சியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் அரசு விழாவில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் அரசு விழாவில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள திறந்தவெளி மைதானத்தில் அரசு விழா 9 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தந்த முதல்-அமைச்சர், அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு கைகொடுத்தார். பின்னர் புதிய திட்டங்களுக்கு அடிக்க நாட்டியதுடன், ரூ.70 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், அரசு நலத்திட்ட உதவிகளையும் அவர் மக்களுக்கு வழங்கினார்.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

அண்ணாமலையார் கோயில் என்பது தமிழ்நாட்டின் சொத்து, அதனை கட்டிக்காத்தது தி.மு.க. அரசு. 2004ல் அண்ணாமலையார் கோயிலை பக்தர்களின் எண்ணத்திற்கு ஏற்ப மீட்டுக்கொடுத்தது திமுக.இன்று மதத்தின் பெயரால் அரசியல் நடத்துபவர்களுக்கு இந்த வரலாறு தெரியாது.

திருவண்ணாமலையை 1989ல் தனி மாவட்டமாக அறிவித்தது தி.மு.க. அரசு. உங்களில் ஒருவன் பயணத்த நான் இங்கிருந்து தான் தொடங்கினேன்.இங்கு தொடங்கிய பயணம் வெற்றி பயணமாக மாறி தற்போது ஆட்சி பயணமாக மாறி உள்ளது. அதற்கு எனது நன்றிகள்.

அறிவார்ந்த யாரும் இந்த அரசுக்கு ஆலோசனை சொல்லலாம், அதனை நாங்கள் செயல்படுத்துவோம்; பொய்யும், புரட்டும் மலிவான விளம்பரம் தேடக்கூடிய வீணர்களைப் பற்றி ஐ டோண்ட் கேர் , நான் மட்டுமல்ல நீங்கள் ஒவ்வொருவரும் ஐ டோண்ட் கேர் என்று கூறி நகர வேண்டும் என கூறினார்.


Next Story