அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி


அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி
x

ஜோலார்பேட்டையில் நடந்த அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டியை கலெக்டர் அமர்குஷ்வாஹா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையில் நடந்த அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டியை கலெக்டர் அமர்குஷ்வாஹா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சைக்கிள் போட்டி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி நேற்று நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் ஜோலார்பேட்டை க.தேவராஜி, ஆம்பூர் ஏ.வில்வநாதன், மாவட்ட கவுன்சிலர் சி.கவிதா தண்டபாணி ஆகியோர் முன்னிலை. வைத்தனர். கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.

13, 15 மற்றும் 17 வயது மாணவ- மாணவர்களுக்கு 6 பிரிவுகளாக சைக்கிள் போட்டி நடைபெற்றது. இதில் 13 வயது மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், மாணவர்களுக்கு 15 கிலோமீட்டர் தூரமும், 15 வயது மாணவிகளுக்கு 15 கிலோமீட்டர் தூரம், மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், 17 வயது மாணவிகளுக்கு 15 கிலோமீட்டர் தூரமும், மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும் சைக்கிள் போட்டி நடைபெற்றது.

பரிசு

வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரமும், அதன்பிறகு வரும் 7 பேருக்கு தல ரூ.250 வீதம் 10 பரிசுகள் வழங்கப்பட உள்ளது. அண்ணா பிறந்த நாளான இன்று (வியாழக்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் உமாசங்கர், ஜோலார்பேட்டை நகர செயலாளர் அன்பழகன், நகர மன்ற தலைவர் காவியா விக்டர், துணைத் தலைவர் இந்திரா பெரியார்தாசன், சிறு விளையாட்டு அரங்க பொறுப்பாளர் அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஜோலார்பேட்டை அருகே நடைபெற்ற சைக்கிள் போட்டியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போதுமான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் அவ்வழியாக செல்லும் போது சாலையோரம் உள்ள அடிபம்பில் தண்ணீர் அடித்து அதனை அருந்தி விட்டு சைக்கிள் போட்டியில் தொடர்ந்து பங்கேற்றனர். தொம்பேசி மேடு அருகே பள்ளி மாணவர்கள் கிழே விழுந்து காயம் அடைந்தனர். அவர்களுக்கு நடமாடும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது.


Next Story