அண்ணா பிறந்த நாள் விழா


அண்ணா பிறந்த நாள் விழா
x

அண்ணா பிறந்த நாள் விழா நடைெபற்றது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் மான்ராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன், மாணவரணி செயலாளர் பெருமாள் பிச்சை, வங்கி தலைவர் காமராஜ், ஒன்றிய, நகர நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதேபோல தி.மு.க.வினர் சார்பில் ஒன்றிய சேர்மன் மல்லி ஆறுமுகம் தலைமையில் தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் நகர்மன்ற சேர்மன் தங்கம் ரவி கண்ணன். துணை சேர்மன் செல்வமணி நகர செயலாளர் அய்யாவு பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அ.ம.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.


Related Tags :
Next Story