ஆண்டு விழா
வேடசந்தூர் அருகே ஸ்ரீமகா வித்யாலயா பள்ளி ஆண்டு விழா நடந்தது.
வேடசந்தூர் அருகே தண்ணீர்பந்தம்பட்டியில் உள்ள ஸ்ரீமகா வித்யாலயா பள்ளியில் 8-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு வேதவித்யா அறக்கட்டளை தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் கணேசன், உயர்நிலைப்பள்ளி முதல்வர் ஷர்மிளாபேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளை செயலாளர் ரேவதி வரவேற்றார். நர்சரி-பிரைமரி பள்ளி முதல்வர் ஜேசுராஜ் பள்ளி ஆண்டறிக்கை வாசித்தார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தனியார் டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் கலந்து கொண்டு, ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நினைவுப்பரிசுகளை வழங்கினார். பின்னர் பெற்றோர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சிறப்பாக அவர் பதில் அளித்தார். நிகழ்ச்சியில் காந்திராஜன் எம்.எல்.ஏ. மனைவி பஞ்சவர்ணம், வேடசந்தூர் ஒன்றிய குழு தலைவர் சவுடீஸ்வரி கோவிந்தன், வேடசந்தூர் பேரூராட்சி தலைவர் மேகலா கார்த்திகேயன், எரியோடு பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துெகாண்டனர். முடிவில் அறக்கட்டளை பொருளாளர் எஸ்.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.