தப்பிச்சென்ற மேலும் ஒரு சிறுவன் சிக்கினான்
நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிச்சென்ற சிறுவர்களில் மேலும் ஒரு சிறுவனை போலீசார் பிடித்தனர்.
நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிச்சென்ற சிறுவர்களில் மேலும் ஒரு சிறுவனை போலீசார் பிடித்தனர்.
கூர்நோக்கு இல்லம்
நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே அரசினர் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு ராஜேந்திரன் என்பவர் வார்டனாக உள்ளார். இந்த கூர்நோக்கு இல்லத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 20 சிறுவர்கள் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 12 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிக்க முயன்றனர். அதனை வார்டன் ராஜேந்திரன் தடுத்த போது அவரை தாக்கி விட்டு 12 பேரும் தப்பி சென்றனர்.
மேலும் ஒருவன் சிக்கினார்
இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தப்பிச்சென்ற சிறுவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் வரை 7 சிறுவர்களை பிடித்தனர். 5 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தில் வைத்து மேலும் ஒரு சிறுவனை போலீசார் பிடித்தனர். தொடர்ந்து மற்ற 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.