சோலார் அருகே விவசாயியிடம் ரூ.35 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது; கட்டுக்கட்டாக போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
சோலார் அருகே விவசாயியிடம் ரூ.35 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கட்டுக்கட்டாக போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சோலார்
சோலார் அருகே விவசாயியிடம் ரூ.35 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கட்டுக்கட்டாக போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ரூ.35லட்சம் பறிப்பு
தேனி மாவட்டம் உத்தமபாளையம் சின்ன ஓலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவாஜி (வயது 67). விவசாயி. இவரிடம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த பாண்டி (50) என்பவர், 'ஈரோட்டில் எனக்கு தெரிந்த ராஜ்குமார் என்பவரிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் உள்ளதால், அவரிடம் ரூ.35 லட்சம் கொடுத்தால் ரூ.50 லட்சத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தருவார்,' என தெரிவித்தார்.
இதனை நம்பிய சிவாஜி ரூ.35 லட்சத்தை எடுத்துக்கொண்டு காரில் லக்காபுரம் பரிசல்துறை அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராஜ்குமார் என்பவர் 2 பேருடன் அங்கு வந்து சிவாஜி, செந்தில் ஆகியோரை தனது காரில் ஏற்றிக்கொண்டு பெருந்துறை நோக்கி புறப்பட்டார்.
கைது
கார் சிறிது தூரம் சென்றதும், எதிரே காரில் வந்த 4 பேர் தாங்கள் அரசு அதிகாரி எனக்கூறி சிவாஜி வந்த காரை மறித்து உள்ளனர். பின்னர் அவர்கள் அனைவரும் சிவாஜி, செந்தில் ஆகியோரை காரில் இருந்து இறக்கியதுடன், அவர்களிடம் இருந்த ரூ.35 லட்சத்தை பறித்து விட்டு சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ரூ.35 லட்சம் பறித்த வழக்கில், கரூர் மாவட்டம் மலைக்கோவிலூரை சேர்ந்த ராஜேந்திரன் (58) என்பவரை லக்காபுரம் பரிசல்துறை நால்ரோட்டில் போலீசார் கைது செய்தனர். கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
போலி "பிரஸ்" ஸ்டிக்கர்
இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய பாசூரில் தங்கியிருந்த நாமக்கல் மாவட்டம் வேலூர் அருகே உள்ள பொத்தனூர் சாந்தி நகர் பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (59) என்பவரை கைது செய்தனர். இவர் விவசாயி சிவாஜியிடம் பணத்தை பறிக்க காரை பயன்படுத்தி வந்ததும், இதற்காக காரில் "பிரஸ்" என ஸ்டிக்கர் ஒட்டி பல்வேறு பத்திரிகைகளில் பணிபுரிவதாக போலி அடையாள அட்டைகளை காண்பித்து தப்பித்து வந்ததும் தெரியவந்தது. இதைத்ெதாடர்ந்து மாதேசை போலீசார் கைது செய்தனர்.
மேலும் 10-க்கும் மேற்பட்ட கார்நம்பர் பிளேட்டுகள், போலி ரூபாய் நோட்டுகள் ரூ.50 லட்சம், பணம் எண்ணும் எந்திரம், போலியான ¼ கிலோ தங்க காசுகள், தராசு மற்றும் எடை கற்கள், போலியான போலீஸ் உடை போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.