ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது


ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 5 July 2023 1:00 AM IST (Updated: 5 July 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:-

ஓசூர் சாந்திநகரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கேசவன் (வயது 51). இவர், பணம் கொடுக்கல் வாங்கல் தொழிலும் செய்து வந்தார். தேன்கனிக்கோட்டை அருகே கே.மல்லசந்திரம் கிராமத்தில் கேசவன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஒரு கும்பல் கேசவனை வெட்டிக் கொலை செய்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 8 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தளி ஜெயந்தி காலனியை சேர்ந்த பில்லப்பா மகன் ஸ்ரீகாந்த் (32) என்பவரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story