மேலும் ஒரு வாலிபர் கைது


மேலும் ஒரு வாலிபர் கைது
x

காவல்துறை வாகனங்களுக்கு தீ வைத்த வழக்கு மேலும் ஒரு வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலவரத்தின்போது போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். இந்த வன்முறை சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதில் போலீஸ் வாகனங்களை தீ வைத்து கொளுத்திய சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கள்ளக்குறிச்சி விலாந்தாங்கல் சாலையை சேர்ந்த சந்திரசேகரன் மகன் நித்திஷ் என்கிற வசந்தன்(வயது 19) என்ற மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


Next Story