அன்பில் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
அன்பில் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
திருச்சி
லால்குடி:
லால்குடி அருகே அன்பில் மாரியம்மன் கோவில் உள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான இந்த கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் கடந்த 2-ந் தேதி நடைபெற்றது. அன்று முதல் கடந்த 10-ந் தேதி வரை பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா, புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதைெயாட்டி தேரில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். லால்குடி, அன்பில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் காலை முதல் மாலை வரை பக்தர்கள் அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டனர்.
Related Tags :
Next Story