அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.29 அடியாக குறைந்தது
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.29 அடியாக குறைந்தது.
அந்தியூா்
அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 21.29 அடியாக குறைந்துவிட்டது.
வரட்டுப்பள்ளம் அணை
அந்தியூர் பர்கூர் மலை அடிவாரத்தில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்து உள்ளது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 33.46 அடி ஆகும். பர்கூர் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீரானது வரட்டுப்பள்ளம், கும்பரவாணி பள்ளம், கல்லுபள்ளம் ஆகியவற்றின் மூலம் வரட்டுப்பள்ளம் அணைக்கு வருகிறது. இந்த அணையில் இருந்து வாய்க்காலில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலமும், அணையில் இருந்து கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி, சந்தியபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஏரி ஆகிய ஏரிகளுக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் மூலமும் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
21.29 அடி
இந்த நிலையில் பருவ மழை பொய்த்ததால் வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. கடந்த சில நாட்களாக பர்கூர் மலைப்பகுதியில் மழை பெய்தாலும், அணைக்கு நீர்வரத்து இல்லை.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 21.29 அடியாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு பர்கூர் மலைப்பகுதியில் 13 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. மழை காரணமாக பர்கூர் மலைப்பகுதியில் மரங்கள் துளிர்த்து பசுமையாக காட்சி அளிக்க தொடங்கி உள்ளது.