அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்


அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்
x

அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

நீலகிரி

குன்னூர்

குன்னூர் மவுண்ட் ரோட்டில் நூற்றாண்டு பழமை வாய்ந்த அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 19-ந் தேதி திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை.

இந்த ஆண்டு வருகிற 19-ந் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. அதற்கான கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி எட்வின் சார்லஸ் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் புனித அந்தோணியார் கொடி மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து கொடியேற்ற விழா, பங்குதந்தை டேவிட் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story