ஆண்டிப்பட்டி மாணவர் தேர்வு
சர்வதேச கிக்பாக்ஸிங் போட்டிக்கு ஆண்டிப்பட்டி மாணவர் தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், கடந்த மே மாதம் மாநில அளவிலான கிக்பாக்ஸிங் போட்டி நடைபெற்றது. இந்த பேட்டியில் ஆண்டிப்பட்டி சீனிவாசநகர் பகுதியை சேர்ந்த சபரீஸ் (வயது 17) கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். மாநில போட்டியில் வெற்றி பெற்றதால், தேசிய அளவிலான போட்டியில் சபரீஸ் தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து தேசிய அளவிலான போட்டி, கடந்த ஜூலை மாதம் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த தேசிய போட்டியிலும் சபரீஸ் வெற்றி பெற்றார். இதனால் தற்போது சபரீஸ் சர்வதேச போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார். சாதனை படைத்த அவரை, ஆண்டிப்பட்டி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அமெச்சூர் கிக்பாக்ஸிங் தேனி மாவட்ட செயலாளர் துரைமுருகன் கூறுகையில், கிக்பாக்ஸிங்கில் தேசிய அளவில் வெற்றி பெற்ற சபரீஸ், சர்வதேச அளவில் நடக்கும் போட்டியில் ஜூனியர் பிரிவில் பங்கேற்க உள்ளார். சர்வதேச போட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடைபெறவுள்ளது என்றார்.