நாகை ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


நாகை ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x

நாகை ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

நாகப்பட்டினம்

நாகை ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக முதல் தளத்தில் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு சாலைகள், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஒப்புதல் வழங்குவதற்கு ஒப்பந்ததாரர்களிடமிருந்து பணம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சித்திரவேலு தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

ரூ.1 லட்சத்து 19 ஆயிரம் பறிமுதல்

இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.1லட்சத்து 19 ஆயிரத்து 290-ஐ லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து அலுவலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகை ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story