போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்


போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
x

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது

மயிலாடுதுறை

கொள்ளிடம்

கொள்ளிடம் அருகே புத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லூரியில் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் தங்கமணி தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். இதில், கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டகணேஷ், லோகநாதன் ஆகியோர் கலந்துகொண்டு, மாணவர்கள் எவ்வித போதை பழக்கத்திற்கும் அடிமையாக கூடாது. நன்றாக படித்து நல்ல நிலைக்கு செல்ல வேண்டும். பெற்றோரையும், நமக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களையும் மறந்து விடக்கூடாது என்று கேட்டுக் கொண்டனர். இதில் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story