போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மங்கலம்பேட்டை அருகே போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர்
விருத்தாசலம்,
மங்கலம்பேட்டை அருகே காட்டுப்பரூர் கிராமத்தில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமை தாங்கி, போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி கூறி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் போலீசார் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story