கைதிகளுக்கு போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


கைதிகளுக்கு போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

கைதிகளுக்கு போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

வேலூர்

வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் ஜெயிலில் தண்டனை, விசாரணை கைதிகள் என்று 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள கைதிகளுக்கு சிறைத்துறை நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி உலகபோதை மறுவாழ்வு தினத்தையொட்டி கைதிகளுக்கு போதைபொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. செந்தாமரைகண்ணன் தலைமை தாங்கினார். ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான் முன்னிலை வகித்தார். ஜெயில் அலுவலர் குணசேகரன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில், ஜெயில் டாக்டர் பிரகாஷ்அய்யப்பன், போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல்சார்ந்த பிரச்சினைகள் குறித்தும், போதை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வழிமுறைகள் பற்றியும் விளக்கி கூறினார். தொடர்ந்து கோபத்தை கையாளுதல் போதை மறுவாழ்வு சவால்கள், போதை மறுவாழ்வு காண ஊக்கப்படுத்துதல் உள்ளிட்ட தலைப்புகளில் டாக்டர்கள், தன்னார்வலர்கள் பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.


Next Story