போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
விருதுநகர்
விருதுநகர் சவுடாம்பிகா மேல்நிலைப்பள்ளி மற்றும் செவன்த் டே மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுலோசனா இந்தநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பின் அவசியம் பற்றி பேசினார். மேலும் காவல் உதவி செயலியின் பயன்பாடு குறித்தும், அதனை அனைவரும் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டது. பாலியல் துன்புறுத்தல், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மோசடி ஆகியவை பற்றி 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story