போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி


போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 11 Jan 2023 12:15 AM IST (Updated: 11 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நடுவட்டத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

நீலகிரி

கூடலூர்,

கூடலூர் அருகே நடுவட்டம் போலீசார் சார்பில், போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கூடலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசீலா தொடங்கி வைத்தார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் உள்ளிட்ட போலீசார் மற்றும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேரணி நடுவட்டம் பஜாரில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக சென்றது. போதைப்பொருள்களை ஒழிப்போம், போதை இல்லாத சமுதாயத்தை படைப்போம் என்ற கோஷங்களை எழுப்பியவாறு மாணவர்கள் சென்றனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story