போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 28 Jun 2023 12:15 AM IST (Updated: 28 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் பகுதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:-

கொள்ளிடம் பகுதிகளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

போதைப்பொருள் ஒழிப்பு

கொள்ளிடம் அருகே புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு ஆனைக்காரன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்அலாவுதீன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முகுந்தாகுமாரி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

ஊர்வலமானது புத்தூர் கடைவீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கல்லூரியில நிறைவடைந்தது. இதில் 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு போதைப்பொருளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். முன்னதாக ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைவரும் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

உறுதிமொழி

இதேபோல் கொள்ளிடம் அருகே சேத்திருப்பு அரசு நடுநிலைப்பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் படியும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா அறிவுறுத்தல்படியும், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பார்த்தசாரதி வழிகாட்டுதலின் படியும், வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி மேற்பார்வையிலும் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலு தலைமை தாங்கினார்.

ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி ரமேஷ் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் சந்திரன், ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தலைமை ஆசிரியர் பாலு பேசுகையில், இன்றைய சமுதாயம் எதிர்நோக்கி உள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்று போதை பொருள் ஆகும்.

மக்களிடையே விழிப்புணர்வு

பொழுது போக்கிற்காகவும், சிறிது நேரம் அற்ப சந்தோஷத்திற்காகவும் பயன்படுத்தப்படும் இந்த போதை பொருட்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவித்து உயிரிழப்புகளை ஏற்படுத்துவதோடு, சமூகத்தில் பல சீர்கேடுகளையும் தோற்றுவிக்கின்றன.

போதை பொருட்களை தடுத்து நிறுத்தவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் மிகவும் அவசியமாகும் என்றார். அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.


Next Story