வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு


வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு
x

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு

வேலூர்

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30-ந் தேதி மனித கடத்தலுக்கு எதிரான உலக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி வேலூர் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட சமூகநல அலுவலர் உமையாள் தலைமை தாங்கினார். தொழிலாளர் நல துணை ஆய்வாளர் ராஜராஜன், வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சங்கீத், திட்ட அலுவலர் கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கலந்து கொண்டு பேசுகையில், பாலியல் தொந்தரவால் பாதிக்கப்படும் சிறுமிகள், பெண்கள் நேரடியாகவோ, உறவினர்கள் அல்லது நண்பர்கள் மூலமாகவோ 181 என்ற எண்ணிலும், சைல்டுலைன் எண்ணான 1098, காவல்துறை அவசர அழைப்பு எண்ணான 100 போன்ற இலவச எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

மேலும் அவர், மனித கடத்தல் தொடர்பான இந்திய தண்டனை சட்டம் 372, பாலியல் தொழிலுக்காக இளம் சிறார்களை வாங்குதல் மற்றும் விற்பதற்கு எதிரான இந்திய தண்டனை சட்டம் 371, 373, 374 ஆகிய சட்டங்கள் குறித்து விளக்கி கூறினார்.

கருத்தரங்கில் கல்லூரி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்


Next Story