குப்பை கிடங்கு அமைக்க சீரமைத்த இடத்தில் மரக்கன்றுகள் நட்டு எதிர்ப்பு
திருவண்ணாமலை அருகே குப்பை கிடங்கு அமைக்க சீரமைத்த இடத்தில் மரக்கன்றுகளை நட்டு எதிர்ப்பு ெதரிவித்து பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அருகே குப்பை கிடங்கு அமைக்க சீரமைத்த இடத்தில் மரக்கன்றுகளை நட்டு எதிர்ப்பு ெதரிவித்து பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள தேவனந்தல் ஊராட்சியில் புனல்காடு அருகே உள்ள மலையை ஒட்டிய பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு குப்பை கிடங்கு அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு புனல்காடு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் அந்த இடத்தை சீரமைத்துக் கொண்டிருந்த பொக்லைன் எந்திரங்களை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று குப்பை கிடங்கு அமைக்கப்பட்ட இடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பள்ளம் தோண்டி 300-க்கும் மேற்பட்ட தென்னை மரக்கன்றுகள், பாதாம், புங்கன், ஆலமரம், அரசமரம் உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த வேப்ப மரத்தின் அடியில் மஞ்சள், குங்குமம் பூசி அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தி போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.