பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
கீழக்கரை
கீழக்கரை நகராட்சியில் எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது வீடுகளில் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும் போன்ற விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக மரக்கன்று நடுதல், மனித சங்கிலி, மணற் சிற்பம், பிளாஸ்டிக் பொருட்களை போடுவதற்கு சைக்கிள் பேரணி, நாடகம் கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சைக்கிள் பேரணியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஹமீது சுல்தான், கமிஷனர் செல்வராஜ், பொறியாளர் அருள், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா முன்னிலை வகித்தனர். தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி, மஹ்தூமியா மேல்நிலைப்பள்ளி, முஹைத்தீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளும் வடக்குத்தெரு நாசா சமூக நல அமைப்பு மதரஸா மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் கீழக்கரை நுகர்வோர் நல சங்க செயலாளர் செய்யது இபுராகிம், மக்தூமியா மேல்நிலைப்பள்ளி தாளாளர் இப்திகார் ஹசன், கவுன்சிலர்கள் நசுருதீன், முகமது பாதுஷா, மீரான் அலி, சேக்உசேன், பயாஸ்தீன், மூர் நவாஸ், முன்னாள் கவுன்சிலர் மூர் ஜெயினுதீன், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.