பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி; கலெக்டர் தொடங்கி வைத்தார்
கடையநல்லூர் யூனியன் நயினாரகரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
தென்காசி
கடையநல்லூர்:
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நயினாரகரம் ஊராட்சி சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. இடைகால் மீனாட்சிசுந்தரம் ஞாபகார்த்த மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை, தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தொடங்கி வைத்தார். அங்கிருந்து தொடங்கிய பேரணி தென்காசி -மதுரை சாலை, இடைகால் பஸ் நிறுத்தம் வழியாக சென்று பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது.
அங்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில், உதவி திட்ட அலுவலர் ராஜாமணி, நயினாரகரம் ஊராட்சி தலைவர் முத்தையா, கடையநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கந்தசாமி, ராதா, பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகர், ஊராட்சி செயலர் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story