பழங்கால பொருட்கள் கண்காட்சி


பழங்கால பொருட்கள் கண்காட்சி
x

பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசியில் உள்ள பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தை நடத்தி வருபவர் ராஜராஜன். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களை சேகரித்து பாதுகாத்து வைத்துள்ளார். அவ்வப்போது இவர் பள்ளி, கல்லூரிகளில் கண்காட்சி நடத்தி பொதுமக்களின் பார்வைக்கு வைத்து வருகிறார். இந்தநிலையில் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தற்போது இவர் கண்காட்சி நடத்தி வருகிறார். தினமும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த கண்காட்சியை ஆர்வமுடன் பார்த்து செல்கிறார்கள்.


Next Story