அந்தியூர்வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானைதலையில் மண்ணை வாரிப்போட்ட காட்சி சமூக வலைத்தளத்தில் வைரல்


அந்தியூர்வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானைதலையில் மண்ணை வாரிப்போட்ட காட்சி சமூக வலைத்தளத்தில் வைரல்
x

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானை தலையில் மண்ணை வாரிப்போட்ட காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது

ஈரோடு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் மலைப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, காட்டு யானை, காட்டு எருமை, மான், கரடி, செந்நாய் போன்ற வனவிலங்குகள் காணப்படுகின்றன.

தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் போன்ற நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால் வனவிலங்குகள் தாகம் தீர்ப்பதற்காக பர்கூர் மலைப்பகுதியில் உள்ள வரட்டுப்பள்ளம் அணைக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து செல்கின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பர்கூர் மலைப்பகுதியில் இருந்து 5-க்கும் மேற்பட்ட யானைகள் வெளியேறி வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் குடிக்க வந்தன. அங்கு தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் வனப்பகுதிக்கு சென்றன. அப்போது அதில் ஆண் யானை ஒன்று துதிக்கையால் மண்ணை அள்ளி தன்னுடைய தலையில் வாரிப்போட்டு விளையாண்டது. இதை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்களுடைய செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.


Next Story