'தேர்தல் வாக்குறுதி எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை''தேர்தல் வாக்குறுதி எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை'கவுந்தப்பாடியில் சசிகலா பேச்சு


தேர்தல் வாக்குறுதி எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லைதேர்தல் வாக்குறுதி எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லைகவுந்தப்பாடியில் சசிகலா பேச்சு
x

‘தேர்தல் வாக்குறுதி எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை’ என்று கவுந்தப்பாடியில் சசிகலா பேசினாா்

ஈரோடு

தேர்தல் வாக்குறுதி எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை என்று கவுந்தப்பாடியில் சசிகலா பேசினார்.

பாசத்தோடு ஆதரவு

கவுந்தப்பாடிக்கு நேற்று இரவு சசிகலா வந்தார். அவருக்கு முன்னாள் ராணுவ வீரர் செங்கோட்டையன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் சசிகலா பேசியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி மேற்கு மாவட்ட மக்கள் எங்களுக்கு பாசத்தோடு ஆதரவு அளித்து வருகிறார்கள். அதனால்தான் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு முதல்-அமைச்சராக வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அவர் என்ன செய்தார் என்று உங்களுக்கு தெரியும்.

தகுந்த பாடம்

ஏழை எளிய மக்களுக்காக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை. தாலிக்கு தங்கம் உள்ளிட்ட நல்ல திட்டங்களை நிறுத்திவிட்டது. அம்மா உணவகங்களும் ஜெயலலிதா ஆட்சியில் இருந்ததுபோல் இல்லை.

தேர்தல் வாக்குறுதியில் கூறிய எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. மக்கள் மிகவும் அல்லல்பட்டு வருகின்றனர். எனவே அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த அரசுக்கும், துரோகிகளுக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

எத்தனை சாத்தியம்?

கவுந்தப்பாடியை தொடர்ந்து சசிகலா பவானி சென்றார். அங்கு அந்தியூர் பிரிவில் தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசும்போது, 'முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு இன்று தாராளமாக விற்கப்படுகிறது.

2 ஆண்டுகளாக ஆட்சி நடத்தும் தி.மு.க. அரசு சிறப்பான திட்டம் என்றும் எதாவது ஒன்றை சொல்ல முடியுமா?.

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலை இழந்து வரும் நிலையில், வெளிநாட்டில் இருந்து முதலீட்டாளர்களை கொண்டு வந்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்குகிறார்கள் என்பது எத்தனை சாத்தியம்?. விவசாயத்துக்கு தனியாக பட்ஜெட் போட்ட தி.மு.க. அரசு இன்று தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது.

கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய 200 டி.எம்.சி. தண்ணீரை பெற்று தருவதில் தி.மு.க. அரசு எந்த தாமதமும் செய்யக்கூடாது' என்றார்.


Next Story