அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் 14 பவுன் நகை-பொருட்கள் திருட்டு


அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் 14 பவுன் நகை-பொருட்கள் திருட்டு
x

மதுரையில் அடுக்குமாடி குடியிருப்பில் அடுத்தடுத்த வீடுகளில் 14 பவுன் நகை, பணம், டி.வி. உள்ளிட்ட பொருட்கள் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை


மதுரையில் அடுக்குமாடி குடியிருப்பில் அடுத்தடுத்த வீடுகளில் 14 பவுன் நகை, பணம், டி.வி. உள்ளிட்ட பொருட்கள் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பூட்டியிருந்த வீட்டின் கதவு உடைப்பு

மதுரை மேல அனுப்பானடி பள்ளிவாசல் மெயின் ரோடு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் தரைத்தளத்தில் வசிப்பவர் முத்துக்குமார் (வயது 40). மிட்டாய் கம்பெனி வைத்துள்ளார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். திரும்பி வந்த போது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது.

பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பொருட்கள் எல்லாம் வெளியே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 13½ பவுன் நகைகள் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் கீரைத்துறை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பொருட்கள் திருட்டு

அதே நேரத்தில் அந்த அடுக்குமாடி குடியிருப்பு முதல் தளத்தில் வசித்து வருபவர் அசோக்குமார் (36). இவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். அவரும் வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த டி.வி., தங்க தோடு, 2 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. அது குறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றியும், வீடுகளில் பதிவான கைரேகைகளையும் கொண்டு விசாரித்து வருகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் அடுத்தடுத்த வீடுகளின் கதவை உடைத்து 14 பவுன் நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story