தொடர் மழையால் ஆப்பக்கூடல் ஏரி நிரம்பியது


தொடர் மழையால் ஆப்பக்கூடல் ஏரி நிரம்பியது
x

தொடர் மழை

ஈரோடு

அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. அதனால் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நீர்மட்டம் உயர்ந்து வருகின்றன.

ஆப்பக்கூடல் ஏரி 126 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதன் உயரம் 11 அடியாக உள்ளது.

தொடர் மழையால் இந்த ஏரி நேற்று காலை 6 மணி அளவில் நிரம்பியது. இதைத்தொடர்ந்து ஏரியில் இருந்து அதன் உபரி நீர் 25 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது. இதன் உபரி நீரானது பவானி ஆற்றுக்கு செல்கிறது.

இந்த ஆண்டில் 2-வது முறையாக ஆப்பக்கூடல் ஏரி நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story